நேதாஜியின் எலும்பை மரபணு சோதனை செய்ய மகள் அனிதா போஸ் கோரிக்கை

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
நேதாஜியின் எலும்பை மரபணு சோதனை செய்ய மகள் அனிதா போஸ் கோரிக்கை

Wednesday, 27 January 2016 07:21

ஜப்பானில் உள்ள நேதாஜியின் எலும்பை மரபணு சோதனை செய்ய வேண்டும் என்று மகள் அனிதா போஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

நேதாஜியின் மகள் அனிதா போஸ், ஜெர்மனியில் வசித்து வருகிறார். இவர் 1945ம் ஆண்டு தமது தந்தை ஜப்பான் விமான விபத்தில் இறந்தார் என்பதை தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட
ஆவணங்களில் நேதாஜி மறைவுக் குறித்து குறிப்புக்கள் இடம் பெறாதது தமக்கு ஆச்சரியம் அளிக்கிறது என்று கூறியுள்ளார் இவர்.

ஜப்பான் புத்த கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும் நேதாஜியின் சாம்பலில் எலும்புகள் இன்னமும் சிதிலமடையாமல் பாதுகாப்பாக இருக்கும் என்பதால், அந்த எலும்புகளை மத்திய அரசு மரபணு சோதனைக்கு உட்படுத்த
வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். மிக விரைவில் இந்தியா வரவுள்ள அனிதா போஸ் இதுக்குறித்து பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவார் என்றும் தெரிய வருகிறது.

மூலக்கதை