தமிழக கல்லூரிகளின் பாதுகாப்பின்மை குறித்து முதல்வர் கவனம் வைக்க வேண்டும்:தமிழிசை

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
தமிழக கல்லூரிகளின் பாதுகாப்பின்மை குறித்து முதல்வர் கவனம் வைக்க வேண்டும்:தமிழிசை

Wednesday, 27 January 2016 08:15

தமிழக கல்லூரிகளின் பாதுகாப்பின்மை குறித்து முதல்வர் கவனம் வைக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, தமிழக கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகளின் மறைவு தெரிவித்துள்ளது. இனியாவது இதுப்போன்று மாணவ மாணவிகள் கல்லூரிகளில் கழிப்பறையைக் கழுவது, சித்தாள் வேலை செய்வது என்று துன்பப்படாமல் படிக்க மாணவ மாணவிகளின் பாதுகாப்பை முதல்வர் கவனத்தில்
எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளிலும் அது எந்த அரசியல் கட்சிகளின் பின்புலத்தோடு இயங்கி வந்தாலும், அடிப்படைவசதிகள் இல்லாத பட்சத்தில் கல்லூரியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று
கோரிக்கை வைத்துள்ளார் தமிழிசை.

மூலக்கதை