நிதர்சனம் சஞ்சிகை வெளியீடு

கதிரவன்  கதிரவன்
நிதர்சனம் சஞ்சிகை வெளியீடு

நேற்றயதினம் காலை 10.00 மணிக்கு சிலாவத்தை பொதுநோக்கு மண்டபத்தில் நிதர்சனம் சஞ்சிகைவெளியிடப்பட்டது .இவ் நிகழ்வில் சிறுவர் நிதியத்தின் திட்டமிடல் முகாமையாளர் திரு அகிலன் குரூஸ் ,முல்லைத்தீவு பங்குத்தந்தை திரு அன்ரனிப்பிள்ளை ,இலங்கை பாரம்பரிய சிறு கைத்தொழில் உப்பு உற்பத்தி பணிப்பாளர் திரு விஜிந்தன் ,மெளளவி முஸ்லீப்,இலங்கைவங்கி முல்லைத்தீவு கிளை முகாமையாளர் ஆகியோர் மங்கள விளக்கேற்ற, வரவேற்புரையினை நிதர்சன இணைப்பாளர் றொபின்சன் நிகழ்த்தினார்.

.தொடர்ந்து சஞ்சிகைக்கான ஆய்வுரையினை சிறுவர் நிதியத்தின் திட்டமிடல் முகாமையாளர் திரு அகிலன் குரூஸ் ஆற்றினார் .

மலர்க்குழு ஆய்வுரையினை டிலக்சியினால் நிகழ்த்தப்பட தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பமாகியது .சிறப்பு பிரதிகளை சிறுவர் நிதியத்தின் திட்டமிடல் முகாமையாளர் திரு அகிலன் குரூஸ் ,முல்லைத்தீவு பங்குத்தந்தை திரு அன்ரனிப்பிள்ளை ,இலங்கை பாரம்பரிய சிறு கைத்தொழில் உப்பு உற்பத்தி பணிப்பாளர் திரு விஜிந்தன் ,மெளளவி முஸ்லீப்,இலங்கைவங்கி முல்லைத்தீவு கிளை முகாமையாளர் ,தமிழருவி இணையத்தள வானொலி இயக்குநர் சாந்தி ,இளைஞர் சேவை அதிகாரி திரு சிந்துயன் ,கிராம அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர்.

சிறப்புரைகளை BERENDINA நிறுவன இலங்கை அபிவிருத்தி முகாமையாளர் ,சமூக ஆர்வலர் திரு தவராசா ,பங்குத்தந்தை,நிதர்சன தலைவர் கங்கை அமரன் ,சிறு கைத்தொழில் உப்பு உற்பத்தி பணிப்பாளர் திரு விஜிந்தன் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
இறுதியாக நிதர்சன செயலாளர் உஷா நந்தினி நன்றியுரை ஆற்ற சஞ்சிகை வெளியீட்டு விழா முற்பகல் 11.30க்கு இனிதே நிறைவேறியது.

இவ் சஞ்சிகையானது பல்சுவை அம்சங்களை தாங்கி மாதம் தோறும் வெளிவரும் என்றும் இதனால் ஈட்டப்படும் இலாபம் எமது பிரதேசத்தில் வசிக்கும் மாற்றுவலுவுடையவர்களின் மறுவாழ்வுக்கு பயன்படுத்தப்படும் .இன்று வெளியாகிய சஞ்சிகையில் மாற்றுவலுவுடைய சிறார்களின் ஆக்கங்கள் பல இடம்பெற்றுள்ளமை குறிப்படத்தக்கது .

2016-01-27

மூலக்கதை