விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வேலைத்திட்டம்

கதிரவன்  கதிரவன்
விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வேலைத்திட்டம்

இலங்கை மக்களை சுகாதாரமிக்க தேகாரோக்கியமான மக்களாக வலுவுட்டுவதற்கு விளையாட்டு அமைச்சு ஊடாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரனைக்கமைவாக 2016 ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி தொடக்கம் 30 ம் திகதிவரை ”விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம் ” என அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 25.01.2016 அன்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட காரியாலயத்தில் தொற்றா நோய்களிலிருந்து தவிர்த்துக்கொள்வதற்காக மற்றும் தேகாரோக்கியத்தை பேணுவதற்காக பின்பற்றவேண்டிய செயற்ப்பாடு தொடர்பான குறுகிய விரிவுரை ஊடாக அறிவித்தல்
சிறந்த உடல் தெகாரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பின்பற்றக்கூடிய பயிற்ச்சித் தொகுதியை அறிமுகப்படுத்தல் மற்றும் செயல்முறையினை செயற்ப்படுத்தல்.

பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவம் சம்மந்தமாக மீளாய்வு செய்தல் மற்றும் சிறந்த பழக்கங்களாக நாளாந்தம் இவ்விடயங்களை நிறைவேற்றுவதற்காக அவர்களை ஊக்குவித்தல் எனும் அடிப்படையில் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி தெரிவித்தார்.

2016-01-27

மூலக்கதை