உயிர்காக்கும் மருந்துகளில் மேலும் 400 மருந்துகளை மலிவு விலையில் வழங்க முடிவு!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
உயிர்காக்கும் மருந்துகளில் மேலும் 400 மருந்துகளை மலிவு விலையில் வழங்க முடிவு!

Wednesday, 27 January 2016 06:34

உயிர்காக்கும் மருந்துகளில் மேலும் 400 மருந்துகளை மலிவு விலையில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

மத்திய அரசு நாடு முழுவதும் 121 சிறப்பு மருந்தகங்கள் மூலம் உயிர் காக்கும் 40 மருந்துகளை மலிவு விலைக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் உயிர் காக்கும் மருந்துகளில் புற்று நோய், இதய நோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்குமான மருந்துகளை 50 சதவிகித தள்ளுபடி விலையில் மலிவு விலைக்கு மக்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இம்மருந்துகள் மலிவு விலையில் மிக எளிதாக கிடைக்க ஏதுவாக நாடு முழுவதும் மேலும் 300 மலிவு விலை மருந்துக் கடைகளை திறக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

 

மூலக்கதை