ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் – ஆசிரியருக்கு பொலிஸ் விசாரணை
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரத்தை அண்மித்த தரம் 01முதல் 05 வரையான பாடசாலை ஒன்றில் கணித ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவன் ஒருவனை பேனாவால் தலையில் குத்தியதால் மாணவன் காயங்களுடன் தனது பெற்றோர்கள் மூலம் லிந்துலை வைத்தியசாலையில் 26 ஆம் திகதி அன்று அனுமதிக்கப்பட்டுள்ளான்.
அத்தோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர்க்கு எதிராக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவன் நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தெரிய வருவதாவது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் கணித பாடம் கற்பித்துக்கொண்டு இருக்கும்போது மாணவனுக்கு விளக்கம் தெரியாததால் தன்னுடன் அமர்ந்திருந்த மாணவனிடம் விளக்கம் கேட்டதனால் கோபமுற்ற ஆசிரியர் இவ்வாறு தாக்கியுள்ளதாக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2016-01-27



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
