குடியரசு தினத்தை முன்னிட்டு தலைவர்களுக்கு பிரணாப் முகர்ஜி தேநீர் விருந்து!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
குடியரசு தினத்தை முன்னிட்டு தலைவர்களுக்கு பிரணாப் முகர்ஜி தேநீர் விருந்து!

Wednesday, 27 January 2016 05:30

இந்தியக் குடியரசுத் தினத்தை முன்னிட்டு பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்தளித்துள்ளார். 

குடியரசு தின நாளை முன்னிட்டு, பிரதமர் உள்ளிட்ட முக்கியமானவர்களுக்கு வருடா வருடம் குடியரசு தலைவர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அதன் படி நேற்று இரவு பிரணாப் முகர்ஜி பிரதமர் நரேந்திர மோடி, ஃபிரான்ஸ் அதிபர் ஹோலண்டே, குடியரசு துணை தலைவர் ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.

இந்த தேநீர் விருந்து நிகழ்வை ஒட்டி, மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தது.

 

மூலக்கதை