நேர்மையான மேம்பட்ட சமூகத்தை உருவாக்க உங்களுடன் நானும் இருப்பேன்: சகாயம் ஐஏஎஸ்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
நேர்மையான மேம்பட்ட சமூகத்தை உருவாக்க உங்களுடன் நானும் இருப்பேன்: சகாயம் ஐஏஎஸ்

Tuesday, 26 January 2016 17:44

நேர்மையான மேம்பட்ட சமூகத்தை உருவாக்க உங்களுடன் நானும் இருப்பேன் என்று இளைஞர்களுக்கு வாட்ஸாப் உரையில் சகாயம் ஐஏஎஸ் கூறியுள்ளார். 

ஐஏஎஸ் அதிகாரியான சகாயம், மதுரை கிரானைட் கல்குவாரி மோசடியை நேர்மையான முறையில் விசாரணை நடத்தி தமிழக மக்களின் கவனங்களை ஈர்த்துள்ளார். அவர் பணியாற்றிய அத்தனை இடங்களிலும் நேர்மையான அதிகாரி என்கிற பெயர் பெற்று பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தமிழகத்தின் இளைஞர்கள் மற்றும் மக்களில் பலர் சகாயம் ஐஏஎஸ் தமிழக முதல்வராக பதவி ஏற்க தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அங்கங்கு பேரணி, மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக சகாயம் ஐஏஎஸ் தமது உரையை வாட்ஸாப்பில் நிகழ்த்தி உள்ளார். அதில், இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தேர்தலை நடத்திடத் திட்டமிட்டு உள்ளது. இந்த நேரத்தில் லஞ்சத்துக்கு எதிராக இந்திய அரசியல் சட்டத் திருத்தங்களுக்கு உட்பட்டு, நேர்மையான மேம்பட்ட சமூகத்தை உருவாக்கிட இளைஞர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்படி நீங்கள் செயல்பட்டால் உங்களுடன் நான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

 

 

மூலக்கதை