அருகாமையில் இடம்பெற்ற பாலியல் பலாத்காரம் காரணமாக எற்றோபிக்கோ பாடசாலைகள் எச்சரிக்கை படுத்தப்பட்ட நிலையில்!

CANADA MIRROR  CANADA MIRROR
அருகாமையில் இடம்பெற்ற பாலியல் பலாத்காரம் காரணமாக எற்றோபிக்கோ பாடசாலைகள் எச்சரிக்கை படுத்தப்பட்ட நிலையில்!

ரொறொன்ரோ- எற்றோபிக்கோவை சேர்ந்த மூன்று பொது பாடசாலைகள் எச்சரிக்கை நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 18-வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டதாகவும் இப்பெண் ஒரு பார்வை தெளிவின்மை கொண்ட மனிதரால் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறிப்பிட்ட பெண் காலை 9.10மணியளவில் எக்லிங்ரன் அவெனியு மேற்கு லியோட் மனொர் வீதி பகுதியில் நடந்து கொண்டிருந்த சமயம் நடந்துள்ளது.
மனிதன் பெண்ணிடம் உரையாட தொடங்கி பின்னர்  வின்ஸ்லான்ட் மற்றும் வின்ரெர்ரோன் பகுதியில் ஒரு ஒதுக்குபுறத்திற்கு அழைத்து சென்றதாகவும் புலன்விசாரனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ரொறொன்ரோ மாவட்ட கல்வி சபை மாட்டின்குறூவ் C.I.ற்கு இந்த பாலியல் துன்புறுத்தல் குறித்த அறிவித்தல் ஒன்றை செய்துள்ளதாகவும் ஜோன் ஜி. அல்ட்ஹவுஸ் M.S மற்றும் பிரின்சஸ் மார்கறெட் J.S ஆகிய பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களிற்கு மின் அஞ்சல்களை அனுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை சபை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையும் பாடசாலையின் உதவி அதிபரும் பொலிசாரை அழைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் மாட்டின்குறூவ் பாடசாலை மாணவியா என்பது உறுதிப்படுத்த படவில்லை.
பிரின்சஸ் மார்கரெட் உப அதிபர் Anna Viegandt அவரது பாடசாலை மாணவர்கள் சம்பந்தப்படாத போதிலும் சம்பவம் நடந்த சிறிது நேரத்தின் பின்னர் பெற்றோர்களிற்கு குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.
மனிதன் ஒருவன் 18-வயது பெண்ணை  இழுத்து சென்று தன்னை அம்பலப்படுத்தியதாக அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்விடத்தில் இருந்து அப்பெண் தப்பி சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளாள்.
சந்தேக நபர் 18-20வயதுடைய பிறவுன் தோல், 5.5உயரம், கறுத்த முடி, தாடி மற்றும் பார்வை தெளிவின்மை கொண்டவரென்றும் பொலிசார் விபரித்துள்ளனர். இவன் ஒரு சிவப்பு தொப்பி மற்றும் கறுப்பு காற்சட்டை அணிந்திருந்தான்.

36 total views, 36 views today

மூலக்கதை