தமிழக சட்டசபை தேர்தல்: பா.ம.க.வில் இன்று முதல் விருப்ப மனு
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபைகளுக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயாராகி விட்டது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை விரைந்து வெளியிடுவதற்கு வசதியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் இன்று முதல் பிப்ரவரி 5-ந் தேதி வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். மனுவுடன் விண்ணப்ப கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
மனுக்கள் பெறப்பட்ட பின்னர் அவற்றை ஆய்வு செய்து, இரு மாநிலங்களிலும் போட்டியிட விண்ணப்பித்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2016-01-27



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
