வெளிநாட்டு வேலைத்திட்டத்திற்கு இளைஞர்களை தெரிவுசெய்தல்-2016

கதிரவன்  கதிரவன்
வெளிநாட்டு வேலைத்திட்டத்திற்கு இளைஞர்களை தெரிவுசெய்தல்2016

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஊடக ஏற்ப்பாடுசெய்யப்படும் சகல வெளிநாட்டு வேலைத்திட்டத்திற்காக இளைஞா கழகங்களில் இணைந்து செயற்ப்படும் இளைஞர் யுவதிகளை பங்குகொள்ளச்செய்யும் நோக்கத்துடன் நேர்முகப்பரீட்சையினை நடாத்த தேசிய இளைஞர் சேவைகள் மன்ற முல்லைத்தீவு மாவட்ட காரியாலம் தீர்மானித்துள்ளதாக மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி கு.சறோஜா தெரிவித்தார்

இதனடிப்படையில் கீழ்வரும் தகுதியுடையவர்கள் நாளை 27.01.2016 புதன்கிழமை காலை பத்துமணிக்கு கண்டி வீதி மாங்குளத்தில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட காரியாலயத்தில் இடம்பெறும் நேர்முகப்பரீட்சையில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கின்றார்
தகைமைகளாக

1.இளைஞர் கழகத்தில் அகக் குறைந்தது 3 வருட செயற்ப்பாட்டாளராக இருத்தல்
2.2016 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகத்தில் விண்ணப்பதாரியாக இருத்தல்

3.க.பொ.த சாதாரண தரத்தில் ஆங்கிலத்தில் சித்தியடைந்திருத்த் அல்லது ஆங்கில மொழி பேசக் கூடிய திறமையுடையவராக இருத்தல்

4.தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலமாக இதற்கு முன்னர் வெளிநாட்டு பயனங்களுக்கு பங்குபற்றாதிருத்தல்

5.வேறு தொண்டர் அமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடல்
6.கலாச்சாரம் மற்றும் விளையாட்டத்திறமைகள் பற்றிய ஆற்றல்

ஆகிய தகைமைகளை அடிப்படையாகக் கொண்டு நேர்முகப்பரீட்சை நடத்தப்படுமெனவும் மேலதிக விபரங்களுக்கு 0212060017.0776178344 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்

2016-01-27

மூலக்கதை