காதலனை தற்கொலை செய்ய உத்தரவிட்டாரா அமெரிக்க யுவதி? எதிராக வழக்கு.

CANADA MIRROR  CANADA MIRROR
காதலனை தற்கொலை செய்ய உத்தரவிட்டாரா அமெரிக்க யுவதி? எதிராக வழக்கு.

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் தனது காதலனை தற்­கொலை செய்­யு­மாறு உத்­த­ர­விட்­ட­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார். மசா­சூசெட்ஸ் மாநி­லத்தைச் சேர்ந்த 18 வய­தான மிஷெல் கார்ட்டர் எனும் இந்த யுவ­திக்கு எதி­ராக கைமோசக் கொலை வழக்கு விசா­ரணை நடை­பெ­று­கி­றது.

இவர் தனது காத­ல­ரான கொன்ராட் ரோய் எனும் இளை­ஞனை தற்­கொலை செய்­யு­மாறு எழுத்து மூலம் உத்­த­ர­விட்­டி­ருந்தார் என அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். கொன்ராட் ரோய் கடந்த 2014 ஜுலையில் காரொன்றில் இறந்­து­கிடந்தார். ரோயின் சட­லத்­துக்கு அரு­கி­லி­ருந்து அவரின் தொலை­பே­சியை பொலிஸார் கண்­டெ­டுத்­தனர்.

இதன் மூலம் மைக்கல் கார்ட்­டரின் உத்­த­ரவு குறித்த விடயம் பொலி­ஸா­ருக்குத் தெரி­ய­வந்­ததாம்.

மைக்­கலும் ரோயும் சுமார் 50 மைல் தொலைவில் வசித்­து­ வந்­த­வர்­க­ளாவர். இவர்கள் பெரும்­பாலும் தொலை­பேசி குறுஞ்­செய்­திகள் மற்றும் மின்­னஞ்சல் ஊடாக உரை­யாடி வந்­தனர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதே­வேளை, மிஷெல் கார்ட்­டரின் சட்­டத்­த­ரணி வாதா­டு­கையில், இரு­வரும் தற்­கொலை செய்­வ­தற்­கான திட்­டத்தை கொன்ட்ராட் ரோயே முன்­வைத்தார் எனத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 2 ஆம் திகதி மிஷெல் கார்ட்டர் நீதிமன்றில் ஆஜராகவுள்ளார்.

26 total views, 26 views today

மூலக்கதை