பாடசாலை துப்பாக்கி பிரயோகத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபரை மன்னிக்க வேண்டும்: உயிரிழந்த சகோதரர்களின் பாட்டி –

CANADA MIRROR  CANADA MIRROR
பாடசாலை துப்பாக்கி பிரயோகத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபரை மன்னிக்க வேண்டும்: உயிரிழந்த சகோதரர்களின் பாட்டி –

கனடா சஸ்கட்சுவான் பாடசாலை துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த இரு சகோதரர்களினதும் பாட்டி, குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞரை மக்கள் மன்னிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சஸ்கட்சுவான் லா லோச்சே பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றினுள் நுழைந்த துப்பாக்கிதாரி மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலில் பாடசாலையின் இரு ஆசியர்கள் உள்ளிட்ட நால்வர் கொல்லப்பட்டனர். அத்துடன் மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் 17 மற்றும் 13 வயதுடைய சகோதர்களான டேய்ன் மற்றும் டிரேடென் ஃபோரெய்ன் ஆகியோரும் உயிரிழந்தனர். இவர்களது பாட்டி உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில், ‘ இது உண்மையில் மனவருத்தமான சம்பவம். லா லோச்சே மக்கள் அவரை (சந்தேகநபரை) மன்னிக்க வேண்டும். நானோ, அவரது தாய் தந்தையரோ இவ்வாறு செய்யுமாறு வற்புறுத்தவில்லை. எனவே எமது குடும்பத்தினரையும் இந்த சமூகம் மன்னிக்க வேண்டும். ‘ என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இரு சகோதரர்களின் பாட்டி சந்தேக நபருக்கு ஒருவகையின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது

119 total views, 119 views today

மூலக்கதை