கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகள் விரைவில்: சுந்தர்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகள் விரைவில்: சுந்தர்

Tuesday, 26 January 2016 10:15

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகள் விரைவில் நிறுவப்படும் என்று, கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறியுள்ளார். 

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாம் அணு உலையில் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து, இப்போது மீண்டும் மின் உறப்த்திக்கு அணு உலை தயாராக உள்ளது என்று கூரியுள்ள சுந்தர், இன்னும் 3 நாட்களில் மின் உற்பத்தி துவங்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகள் அமைக்க, தேசிய அணுமின் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது என்று சுந்தர் கூறியுள்ளார்.

 

மூலக்கதை