எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் இறப்புக் குறித்து பாஜக சார்பில் உண்மை கண்டறியும் குழு: தமிழிசை

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் இறப்புக் குறித்து பாஜக சார்பில் உண்மை கண்டறியும் குழு: தமிழிசை

Tuesday, 26 January 2016 10:01

எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் இறப்புக் குறித்து பாஜக சார்பில் உண்மை கண்டறியும் குழு நியமிக்கப்பட்டு உள்ளது என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். 

குடியரசு தின விழாவை முன்னிட்டு கட்சியில் தேசிய கொடியை ஏற்றிய தமிழிசை சவுந்திரராஜன், எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகளின் இறப்புக் குறித்து மாநில, மாவட்ட நிர்வாகங்கள் என்ன செய்து கொண்டு இருந்தன, இருக்கின்றன என்கிற வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதோடு பட்டப் படிப்பு படிக்க வந்த மாணவர்களை கழிப்பறை கழுவவிட்ட கல்லூரி நிர்வாகம் மிகவும் கண்டிக்கத் தக்கது என்று கூறினார்.

உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு தலா 25 லட்சம்ரூபாய் தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தமிழிசை கோரிக்கை வைத்தார். அதோடு பாஜக சார்பில் எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகளின் இறப்பு குறித்து விசாரிக்க உண்மை கண்டறியும் குழு நியமிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.

 

 

மூலக்கதை