நாட்டைவிட்டு வெளியேறுகிறேன் என்று நான் கூறவேயில்லை : நடிகர் அமீர்கான் விளக்கம்
பதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (17:9 IST)
மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (17:9 IST)
நாட்டைவிட்டு வெளியேறுகிறேன் என்று
நான் கூறவேயில்லை :
நடிகர் அமீர்கான் விளக்கம்
நாட்டில் சகிப்புத்தன்மை விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, அதில் நடிகர் அமீர்கானும் சிக்கினார். நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு சம்பவங்கள் தன்னை எச்சரிப்பதாகவும், இதன் காரணமாக இந்தியாவை விட்டு வெளியேறலாம் என்று தன்னுடைய மனைவி கிரண் ராவ் தன்னிடம் கூறியதாகவும் அமீர்கான் தெரிவித்தார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, அவர் தன்னுடைய கருத்தில் இருந்து பின்வாங்கினார். இந்த சூழ்நிலையில், ‘வியத்தகு இந்தியா’வின் பிரசார தூதர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதனால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில், கடந்த 2006–ம் ஆண்டில் வெளியான அவரது ‘ராங்க் டே பஷந்தி’ படத்தின் 10–வது ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் அமீர்கான் கலந்து கொண்டார்.
அங்கே அவர் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, சகிப்புத்தன்மை தொடர்பாக அவர் தெரிவித்த மாறுபட்ட கருத்துகளுக்கு விளக்கம் அளித்தார்.
அவர், ’’இந்தியா சகிப்புத்தன்மையற்ற நாடு என்றோ அல்லது நாட்டை விட்டு நான் வெளியேறுகிறேன் என்றோ ஒருபோதும் நான் கூறியது கிடையாது. என்னுடைய கருத்து தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு சில ஊடகங்கள் தான் பொறுப்பு. இந்த நாட்டில் பிறந்த நான் இந்த நாட்டிலேயே இறக்க விரும்புகிறேன்.
நமது நாடு பல தரப்பட்ட மொழிகள், கலாசாரம் என பன்முகத்தன்மை கொண்ட நாடு. இதுபோன்று வேறு எந்தவொரு நாடும் கிடையாது. நான் வெளிநாடுகளுக்கு செல்லும் போது எல்லாம், என்னால் 2 வாரத்துக்குள் அங்கு தங்க முடியாது. வீட்டு ஏக்கத்தால் பாதிக்கப்பட்டு விடுவேன்’’என்று கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
