காலம் உருவாக்கவில்லை என்றாலும் அந்த காலத்தை உருவாக்குவேன்: கருணாநிதி

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
காலம் உருவாக்கவில்லை என்றாலும் அந்த காலத்தை உருவாக்குவேன்: கருணாநிதி

Tuesday, 26 January 2016 09:28

எனக்கேற்ற காலத்தை காலம் உருவாக்கவில்லை என்றாலும் ,அந்த காலத்தை உருவாக்க எனக்குத் தெரியும் என்று, திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். 

திருவாரூரில் புதிய பள்ளிக் கட்டிட வளாகத்தை திறந்து வைத்து உரையாற்றினார் கருணாநிதி. அப்பள்ளியின் புதிய கட்டிட வளாகத்துக்கு தமது சொந்த நிதியிலிருந்து, நிதியுதவி கொடுத்ததாக கருணாநிதி கூறினார். இதுவரை இப்படி பல்வேறு விஷயங்களுக்கு 7 கோடியே 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இதுவரை வழங்கப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நான் என்ன செய்கிறோமோ அதைத்தான் காலம் தமக்கு திருப்பிக் கொடுக்கும் என்றும், சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த தாம், இப்போது விவசாயிகளைக் காக்கும் பொறுப்பு ஏற்கும் அளவுக்கு காலம் தம்மை அழைத்து வந்துள்ளது என்றும் கூறியுள்ளார் கருணாநிதி. மேலும், மக்களுக்கு வேண்டியதை செய்ய காலம் இடமளிக்கும் என்றும், அப்படி காலம் இடம் அளிக்கவில்லை என்றாலும், அந்த காலத்தை உருவாக்க எனக்குத் தெரியும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

 

மூலக்கதை