வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதல்வர்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதல்வர்

Tuesday, 26 January 2016 07:59

தமிழகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா.

சென்னை மெரீனா கடற்கரையில் குடியரசு தின நாள் கொண்டாட்டங்கள் நடைப்பெற்றது. விழா தமிழக ஆளுநர் ரோசைய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தமிழகத்தில் வீர தீரமாக  செயல்பட்டவர்களுக்கு ஜெயலலிதா அண்ணா பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பின் போது சிறப்பாக செயல்பட்ட காவலர்கள், பொது மக்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார் முதல்வர்.

மற்றும் காவல்துறை, வேளாண் துறை உள்ளிட்ட துறை ரீதியான சிறப்புப் பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. குடியரசு தின நாளை முன்னிட்டு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரோசையா தேநீர் விருந்து
அளித்தார்.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் கொடி ஏற்ற, விழா இனிதே நடைபெற்று வருகிறது.

மூலக்கதை