நாடாளுமன்ற ஆட்சி முறை இந்தியாவுக்கு பொருத்தமற்றது: சசிதரூர்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (9:45 IST)

மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (9:45 IST)

நாடாளுமன்ற ஆட்சி முறை இந்தியாவுக்கு பொருத்தமற்றது: சசிதரூர் 

பன்முகத் தன்மையும், பல்வேறு பிரிவுகளையும் கொண்ட நாட்டிற்கு நாடாளுமன்ற ஆட்சி முறை உகந்ததாக இருக்காது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசிதரூர் கூறியுள்ளார். 

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் இறுதி நாளில் மேலும் பேசிய அவர், இந்தியாவுக்கு பொருத்தமற்ற நாடாளுமன்ற அமைப்பு முறையை தொடர்ந்து பின்பற்றி வருவதற்கு காரணம், இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்தை முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு பின்பற்றுவதுதான். 1930ம் ஆண்டில் சைமன் கமிஷன் அறிக்கையில் இந்தியாவுக்கு ஏற்றது அதிபர் ஆட்சி முறைதானே தவிர, நாடாளுமன்ற ஆட்சி முறை அல்ல என்று கூறியதாகவும், இதற்கு தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாகவும் கூறினார். 

மூலக்கதை