பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் – லண்டன் சுரங்க ரெயில் பணியாளர் வேலை நிறுத்தம் வாபஸ்

கதிரவன்  கதிரவன்
பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் – லண்டன் சுரங்க ரெயில் பணியாளர் வேலை நிறுத்தம் வாபஸ்

நாளை நடைபெறுவதாக இருந்த லண்டன் சுரங்க பாதை ரெயில் பணியாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இரவு நேர பணி மற்றும் சம்பள உயர்வு தொடர்பான கோரிகைகளை வலியுறுத்தி நாளை ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக ’ரெயில், கடல்வழி மற்றும் போக்குவரத்து’ (RMT) தொழிற்சங்கம் அறிவித்திருந்தது. இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாக கூடும் என்று அஞ்சப்பட்டது.

இந்நிலையில் நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை அடுத்து நாளை நடைபெறுவதாக இருந்த பணியாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நிர்வாகம் அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் ஆர்.எம்.டி. சங்கம் தெரிவித்துள்ளது.

2016-01-26

மூலக்கதை