காமவெறிக்கொண்ட கணவனை கொடூரமாக கொன்ற இலங்கை பெண்: அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்
அவுஸ்திரேலியாவில் உள்ள Geraldton என்ற நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் Dinendra Athukorala மற்றும் மருத்துவரான Chamari Liyanage என்ற இலங்கையை சேர்ந்த தம்பதி வசித்து வந்துள்ளனர்.
நாகரீக வாழ்க்கை மீது மோகம் கொண்ட இருவரின் பாலியல் உறவு முறைகளும் விபரீதமானதாகவே இருந்துள்ளது.
அதாவது, இருவரும் அடிக்கடி இயற்கைக்கு எதிரான வகையிலேயே உறவு கொண்டுள்ளனர்.
ஒரு நிலையில், கணவரின் விருப்பம் ஆபத்தானதாக மாறி 17 வயதான இளம்பெண்ணுடன் கணவன் மனைவி இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை மனைவியும் அனுமதித்ததாகவே கூறப்படுகிறது. எனினும், ஒரு கட்டத்தில் கணவனின் வினோதமான பாலியல் விருப்பங்கள் மனைவிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் இளம்பெண்ணுடன் வைத்துக்கொண்ட சட்டவிரோதமான உறவு முறை வெளிச்சத்திற்கு வந்தால், தனது மருத்துவர் பணி பரிபோய்விடும் என்ற அச்சம் மனைவியின் மனதில் எழுந்துள்ளது.
அதேசமயம், கணவனின் கொடூரத்தனமான காம விருப்பங்கள் எல்லைக்கடந்து செல்வதால் கூடுதலாக அச்சம் அடைந்த மனைவி தனது கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், ஓர் நாள் கட்டிலில் கணவன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது, வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து வந்து கணவனின் தலையில் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.
கணவன் இறந்துவிட்டான் என்பதை உறுதி செய்த மனைவி உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு யூன் மாதம் நிகழ்ந்த இந்த கொலை தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
பெண்ணிற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ‘கணவனின் எல்லை மீறிய பாலியல் விருப்பங்களே அவரை கொலை செய்ய தூண்டியுள்ளது. எனவே, இது தற்காப்பிற்கான கொலை முயற்சி என கருத்தில் கொண்டு பெண்ணிற்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
