அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு!

Wednesday, 20 January 2016 09:36

அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை கடும்சரிவடைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகமாகி உள்ளதால், அங்கு கச்சா எண்ணெய் விலை கடும் சரிவைக் கண்டுள்ளது.பால், குடி நீர் விலைக்குக் குறைவாக பெட்ரோல் விலை குறையும் என்கிற எதிர்ப்பார்ப்பும் மக்களிடையே நிலவி வருகிறது.

தற்போது அமரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இந்திய ரூபாயில் 26 ரூபாய் விற்கப்பட்டு வருகிறது. இது மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிய வருகிறது. பொருளாதாரத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள ஈரான் நாடும் கச்சா எண்ணெய் உற்பத்தியைத் துவக்கி உள்ளதால், கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்து வருவது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

 

 

மூலக்கதை