சிரியாவில், ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்களில் 270 பேர் விடுதலை – 130 பேரின் கதி என்ன?
சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கு முக்கிய நகரங்களை தங்களது பிடியில் வைத்து உள்ளனர். மேலும் அங்கு உள்ள மற்ற முக்கிய நகரங்களை கைப்பற்ற அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
சிரியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான டெயிர் அல்-ஜோர் நகரை கைப்பற்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஒரு வாரமாக சண்டையிட்டு வருகின்றனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து, ராணுவவீரர்கள் மற்றும் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.
கடந்த 16-ந்தேதி, அந்த நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர்கள், பெண்கள் உள்பட 400 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். தங்களது இயக்கத்துக்காக சண்டையிட ஆள் சேர்க்கும் பொருட்டு இது போன்ற மனித கடத்தலில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடத்தி செல்லப்பட்ட 400 பேரில், 270 பேரை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு விடுதலை செய்து உள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் தாங்களே முன்வந்து அவர்களை விடுவித்து உள்ளனர். ஆனால் கடத்தி செல்லப்பட்டவர்களில் மற்ற 130 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.
இந்த தகவலை சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே நேற்று முன்தினம், அதே நகரில் சிறை கைதிகள் 50 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தி சென்றிருப்பதாகவும், அவர்கள் அனைவரும் 14 முதல் 55 வரை வயதிலான ஆண்கள் எனவும் அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.
2016-01-21



காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
