’கெத்து’ காட்டும் விஜய் சேதுபதி!

நக்கீரன்  நக்கீரன்
’கெத்து’ காட்டும் விஜய் சேதுபதி!

’கெத்து’ காட்டும் விஜய் சேதுபதி!

நானும் ரௌடி தான் வெற்றியைத் தொடர்ந்து வழக்கமான இடைவெளி இல்லாமல், அடுத்தடுத்த படங்களில் அதிவேகமாக நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. இதன் விளைவாக அவரது படங்கள் வேகமாக முடிவடைந்து ரிலீஸுக்கான பணிகளில் இறங்கிவிட்டன. சேதுபதி, காதலும் கடந்து போகும் என இரண்டு படங்களின் டீசரை வெளியிட்டு ‘கெத்து’ காட்டிய விஜய் சேதுபதிக்கு, அந்த டீசர்கள் அடைந்த வெற்றியால் கிடைத்த மகிழ்ச்சியுடன் சில பிரச்சனைகளும் வந்திருக்கிறது.


காதலும் கடந்து போகும் படத்தின் டீசரில் டைட்டிலின் முதல் மூன்று எழுத்துகளை வைத்து க க க போ... என ஒரு பாடல் வடிவமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இளம் தலைமுறையின் மத்தியில் அந்த டியூனின் ரீச் வேற லெவலில் இருந்தாலும், க க க போ என ஒரு படத்தை இயக்கி ரிலீஸுக்கு தயாராக வைத்திருக்கும் இளம் இயக்குனர் விஜய் அந்த டைட்டில் எனக்கே சொந்தம் என கூறுகிறார். 

மூலக்கதை