மூன்று ஆண்டுகளாக நீடித்த YouTube மீதான தடையை பாகிஸ்தான் நீக்கியது!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
மூன்று ஆண்டுகளாக நீடித்த YouTube மீதான தடையை பாகிஸ்தான் நீக்கியது!

Tuesday, 19 January 2016 06:50

இணைய உலகில் முன்னணி காணொளி பகிரும் தளமான YouTube-இற்கு பாகிஸ்தானில் கடந்த மூன்று ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை நீக்கியுள்ளது. 

இஸ்லாமை இழிவுபடுத்தக் கூடிய காணொளியை பகிர்ந்ததாகக் கூறி YouTube இணையதளம் பாகிஸ்தான் அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டிருந்தது.

YouTube தற்போது நிர்வகிக்கும் கூகுள் நிறுவனம் பாகிஸ்தானுக்கான பிரத்யேக YouTube இணையதளத்தை வடிவமைத்து செயற்பட வைத்திருப்பதால், YouTube இணையதளம் மீதான தடை இனிமேல் தேவையில்லை என்று பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் YouTube இணையதளத்தில் இருக்கும் காணொளிகளை அதிகாரிகள் வடிகட்ட வழியிருப்பதாக நம்பப்படுகிறது.

அதேசமயம், YouTube இணையதளம் தொடர்பில் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தில் இருக்கும் விதிகள் மற்றும் நடைமுறைகள் குறித்து மேலதிகமாக வெளிப்படைத் தன்மை தேவை என்று பாகிஸ்தானின் இணைய சுதந்திரத்திற்கான செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

மூலக்கதை