காதலர் தினத்தில் மிரட்ட வரும் ஜெயம் ரவி – ராய் லட்சுமி
ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் புதிய படம் ‘மிருதன்’. இதில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தின் கதை இறந்து போனவர்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து பூமியில் நடமாடும் ‘ஜாம்பீ’ (Zombie) பாணியிலானது. இப்படத்தின் டிரைலரே அனைவரையும் பயமுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 12-ந் தேதி வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதேபோல், ராய்லட்சுமி – ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘சவுகார்பேட்டை’ படமும் பிப்ரவரி 12-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இப்படத்தை வடிவுடையான் இயக்கியுள்ளார். இப்படமும் பேய் சம்பந்தப்பட்ட கதை. இதில் ராய் லட்சுமி பேயாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, இந்த ஆண்டு காதலர் தினத்தில் இரண்டு விதமான பேய்கள் ரசிகர்களை மிரட்ட தயாராகியிருக்கிறது என்று சொல்லலாம்.
2016-01-19



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
