பாரீஸ் தாக்குதலை நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள் இங்கிலாந்துக்கு விட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை!

CANADA MIRROR  CANADA MIRROR
பாரீஸ் தாக்குதலை நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள் இங்கிலாந்துக்கு விட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை!

கடந்த நவம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய தாக்குதலை நடத்திய தீவிர்வாதிகள் குறித்த வீடியோ ஒன்றை ஐ.எஸ் அமைப்பு தற்போது வெளியிட்டு உள்ளது. ஜிகாதி வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவுக்கு அவர்களை எங்கு கண்டாலும் கொல்லுங்கள் என்று தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது.அதில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் துப்பாக்கி இலக்கில் இருப்பதாக காட்டபட்டு உள்ளது.

பாரீஸ் தாக்குதலை பொறுப்பேற்று நடத்திய 4 பேர் பெல்ஜியத்தை சேர்ந்தவர்கள் என்று வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. 3 பேர் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் என்றும், இருவர் ஈராக்கியர்கள் என்றும் அந்த வீடியோ விவரிக்கிறது. 17 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் பாரீஸ் தாக்குதலில் ஈடுபட்ட பிலால் ஹட்பி உள்ளான்.

இந்த தக்குதலுக்கு அப்தெல் ஹமீது அபாட் மூலையாக செயலபட்டு உள்ளான். என்று இந்த வீடியோ மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் அனைத்து நாடுகளுக்கும் பகிரங்க மிரட்டல் விடுக்கபட்டு உள்ளது.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தலை துண்டித்து கொல்லப்படுவார் என்றும் வீடியோவில் பகிரங்க கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பாரிஸில் நடந்த தாக்குதல் குறித்த திட்டங்கள், அதற்கு எதிராக பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் எடுத்த நடவடிக்கைகள் ஆகியன குறித்தும் இந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த் வீடியோ கடந்த இரவு வெளியிடபட்டு உள்ளது.

214 total views, 214 views today

மூலக்கதை