கொந்தளிப்பினால் நியு பவுண்லாந்தில் அமெரிக்க விமானம் தரையிறக்கப்பட்டது.

CANADA MIRROR  CANADA MIRROR
கொந்தளிப்பினால் நியு பவுண்லாந்தில் அமெரிக்க விமானம் தரையிறக்கப்பட்டது.

கனடா-அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணிகள் ஜெட் ஒன்று ஞாயிற்றுகிழமை இரவு சென்ட்.ஜோன்ஸ் நியு பவுன்லாந்தில் ஒரு அவசர தரையிறக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியது. கடுமையான கொந்தளிப்பு தாக்கம் இதற்கு காரணமென கூறப்பட்டுள்ளது.
தரையிறக்கப்பட்டதும் மூன்று விமான பணியளார்கள் மற்றும் நான்கு பயணிகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விமானத்தில் இருந்த சிலர் காயமடைந்ததாகவும் ஆனால் காயங்களின் இயல்பு அல்லது தீவிரம் உடனடியாக தெரியவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Flight 206 அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் மியாமியிலிருந்து உள் ஊர் நேரம் பிற்பகல் 3மணிக்கு புறப்பட்டுள்ளது. விமானம் மிலான் நோக்கி சென்று கொண்டிருந்த சமயம் ‘கடுமையான’ கொந்தளிப்பிற்கு ஆளாகியது. இருக்கை பட்டியின் வெளிச்சம் எரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பயணிகள் பீதியடைய ஆரம்பித்தனர். விமான பணியாளர்கள் காயமடைந்தவர்களிற்கு உதவும் முயற்சியில் இறங்கினர்.
‘நாங்கள் கீழே போகின்றோம்’ என உணர்ந்ததாக ஒரு பயணி தெரிவித்தார்.
யுஎஸ்சின் வடகிழக்கு பகுதியை தாக்கிய பாரிய புயல் காற்றின் எச்சங்களான கடினமான காற்றாக இருக்கலாம் என பைலட் Capt. Bertrand Lecocq கூறியுள்ளார்.
விமானம் சென்ட்.ஜோன்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் பிற்பகல் 9.45ற்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் 192பயணிகள் மற்றும் 11 பணிக்குழு அங்கத்தவர்கள் இருந்தனர் என விமான நிறுவனம் உறுதிசெய்துள்ளது.

96 total views, 96 views today

மூலக்கதை