ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களின் காவல் நீடிப்பு!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களின் காவல் நீடிப்பு!

Monday, 25 January 2016 12:05

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களின் காவலை தேசிய புலனாய்வு நீதிமன்றம் நீட்டித்து உள்ளது. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பு 12 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தது. இவர்கள் அனைவரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் ஸ்கைப் உள்ளிட்ட பல்வேறு வலைத் தளங்கள் மூலம் தொடர்பில் உள்ளது தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இவர்கள் அனைவரும் டெல்லியிலுள்ள புலனாய்வு நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், வருகிற பிப்ரவரி மாதம் 4ம் திகதி வரை இவர்களின் காவலை நீட்டித்து உத்தரவுப் பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

 

 

மூலக்கதை