மோடி- ஹோலண்ட் சந்திப்பு: இந்தியா- பிரான்ஸ் இடையே 13 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
மோடி ஹோலண்ட் சந்திப்பு: இந்தியா பிரான்ஸ் இடையே 13 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Monday, 25 January 2016 11:19

பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் ஹொலண்டே ஆகியோருக்கிடையில் இன்று இடம்பெற்ற பேச்சுக்களின் போது இந்தியாவுக்கும்- பிரான்ஸூக்கும் இடையில் 13 ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன. 

டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நரேந்திர மோடி, ஹோலண்டே இருவரும் இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது மற்றும் ஒப்பந்தங்களில் கை எழுத்திடுவதுக் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். 3 மணி நேர

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருவரும் 13 ஒப்பந்தங்களில் கைஎழுத்திட்டனர் என்று தெரிய வருகிறது.

இந்த ஒப்பந்தங்களில் இந்தியாவில் மத்திய அரசு அமைக்கவுள்ள ஸ்மார்ட் சிட்டிக்கு முதலீடு செய்வது, ரஃபேல் போர் விமானங்களை விலைக்கு என்று ஃபிரான்ஸ் இந்தியாவுக்கு வழங்குவது உள்ளிட்ட 13 ஒப்பந்தங்களில் இருவரும் கை எழுத்திட்டனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

 

மூலக்கதை