அதிர்ச்சிமிக்க நெடுஞ்சாலை விபத்து. எட்டு பேர்கள் காயம்.

CANADA MIRROR  CANADA MIRROR
அதிர்ச்சிமிக்க நெடுஞ்சாலை விபத்து. எட்டு பேர்கள் காயம்.

கனடா-மிசிசாகாவில் இரண்டு வாகனங்கள் மோதிய பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. எட்டு பேர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
East Gate Parkway அருகில் நெடுஞ்சாலை 403ல் ஞாயிற்றுகிழமை இரவு 10.30மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
நிசான் எஸ்யுவி ஒன்றும் ரொயொட்டா செடான் ஒன்றும் மோதியுள்ளன. ஆனால் விபத்திற்கான காரணம் தெரியவரவில்லை.
விபத்தினால் எஸ்யுவி தலைகீழாக புரண்டதால் வாகனத்திற்குள் இருந்து ஐந்து பேர்கள் வெளியே இழுத்தெடுக்கப்பட்டனர் என ஒன்ராறியோ மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எட்டு பேர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் காணப்பட்டதாகவும் மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல மணித்தியாலங்கள் நெடுஞ்சாலை கிழக்கு பாதைகள் போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்து திங்கள்கிழமை காலை 7மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.

17 total views, 17 views today

மூலக்கதை