கோலிவுட் - பாலிவுட் - ஹாலிவுட்! தனுஷின் ஆட்டம்!

நக்கீரன்  நக்கீரன்
கோலிவுட்  பாலிவுட்  ஹாலிவுட்! தனுஷின் ஆட்டம்!

கோலிவுட் - பாலிவுட் - ஹாலிவுட்! தனுஷின் ஆட்டம்!

புதுப்பேட்டை, ஆடுகளம் போன்ற படங்களால் தனது திறமையால் கோலிவுட்டில் நிலையான இடம்பிடித்து, தேசிய விருது மூலம் இந்தியா எங்கும் புகழ்பெற்று பாலிவுட்டுக்குச் சென்றவர். பாலிவுட்டிலும் ராஞ்சனா, ஷமிதாப் என இரு படங்களிலும் தனிப்பெயர் பெற்று தற்போது ஹாலிவுட் இயக்குனரின் இதயத்தில் இடம்பிடித்துவிட்டார்.


மர்ஜன் சட்ரபி என்ற இரானியன்-பிரெஞ்சு இயக்குனரின் இயக்கத்தில் உமா துர்மன் மற்றும் அலெக்சான்ட்ரா தட்டாரியோவுடன் தனுஷ் நடிக்கிறார். பிரெஞ்சு எழுத்தாளர் ரொமைன் பியூட்ராலஸ் எழுதிய The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard என்கிற நாவலை மர்ஜன் சட்ரபி படமாக இயக்குகிறார். அந்த கதையில் வரும் மந்திரவாதி கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். தனுஷை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தது குறித்து மர்ஜன் சட்ரபி “பல இந்திய படங்களைப் பார்த்தபோது தனுஷ் எனது சிறந்த தேர்வாக அமைந்தார். அவரது அறிவும், கில்லர் சிரிப்பும், ஒரு கதாபாத்திரத்தின் உள்ளே தன்னை இணைத்துகொண்டு நடிக்கும் திறமையும் அவர் தான் சிறந்த தேர்வு என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்தது” என்று கூறியிருக்கிறார்.

இந்திய திரையுலகில் பெயர் பெற்ற பல நடிகர்களும் ஹாலிவுட் வாய்ப்பு வரும்போது, அங்கு சென்றால் இன்றைய இடம் பறிபோய்விடுமோ என்ற பயத்தில் அதை ஏற்கமாட்டார்கள். இதற்கு உதாரணம் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் எங்கு சென்றாலும் தன் திறமையால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் தனுஷ் ஹாலிவுட்டிலும் VIP-ஆக வலம் வர வாழ்த்துக்கள். 

மூலக்கதை