பிரபல நடிகை திடீர் மரணம்
பதிவு செய்த நாள் : 25, ஜனவரி 2016 (10:47 IST)
மாற்றம் செய்த நாள் :25, ஜனவரி 2016 (10:47 IST)
பிரபல நடிகை திடீர் மரணம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நடிகை கல்பனா. மலையாள பட உலகில் திக் விஜயம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 1983–ல் பிரபல மலையாள கதாசிரியர் வாசுதேவ நாயரின் மஞ்சு (மூடுபனி) என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிறகு பிரபலமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கல்பனாவின் சகோதரிகள் நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி.
ஞாயிற்றுக்கிழமை ஒரு சினிமா பட சூட்டிங்கிற்காக நடிகை கல்பனா ஐதராபாத் சென்றார். அங்குள்ள ஒரு ஓட்டலில் அவரும், படக்குழுவினரும் தங்கியிருந்தனர். இன்று அதிகாலை நடிகை கல்பனா அவரது அறையில் மயங்கி கிடந்தார். படக்குழுவினர் அவரை மீட்டு அங்குள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். அவர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
கல்பனாவின் உடல் இன்று விமானம் மூலம் ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு அவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
