பதான்கோட் தாக்குதலோடு தொடர்புபட்ட பாக்’ குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி: நவாஸ் ஷெரீப்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
பதான்கோட் தாக்குதலோடு தொடர்புபட்ட பாக்’ குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி: நவாஸ் ஷெரீப்

Monday, 25 January 2016 04:01

இந்தியாவின் பதான்கோட் விமானநிலையத்தில் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த யாராவது சம்பந்தப்பட்டிருப்பார்களானால் அவர்களுக்கு தண்டனை வழங்குவது உறுதி என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். 

பதான்கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை இந்தியா வழங்கியுள்ளது என்றும் பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.

நவாஸ் ஷெரிப் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்தியா சமர்ப்பித்துள்ள ஆதாரங்களை ஆராய்ந்து வருகிறோம். குற்றவாளிகள் நிச்சயம் நீதி முன் நிறுத்தப்படுவார்கள். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இந்தியா சென்று ஆதாரங்களை சேகரிக்கும்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியுள்ளேன். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க தேவையான உதவிகளை செய்வதாக உறுதியுளித்துள்ளார். நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்.” என்றுள்ளார்.

மூலக்கதை