கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு டுவிட்டரில் மிரட்டல்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 24, ஜனவரி 2016 (19:16 IST)

மாற்றம் செய்த நாள் :24, ஜனவரி 2016 (19:16 IST)

கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு

 டுவிட்டரில் மிரட்டல்

 முதல்வர் சித்தராமையாவிற்கு டுவிட்டரில் மிரட்டல் விடுத்த மென் பொருள் இன்ஜினீயரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தகவல் பரிமாற்ற ஊடகம் டுவிட்டரில் முதல்வர் சித்தராமையா, நகரசபை தலைவரை சமீபத்தில் அறைந்த காட்சியை இளைஞர் ஒருவர் வெளியிட்டிருந்தார். அத்துடன் முதல்வர் சித்தராமை யாவை கடுமையான சொற்களால் வசைபாடிய அந்த நபர், தீவிரவாத அமைப்புகள் முதல்வர் சித்தராமையாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். 

இதைத் தொடர்ந்து டுவிட்டரில் முதல்வர் சித்தராமையாவிற்கு எதிராக கருத்துகளை தெரிவித்த நபர் குறித்து விசாரணை நடத்தியபோது, அந்த வாலிபர் மென் பொருள் இன்ஜினீயர் ரோகன்(33) என்பது தெரிய வந்தது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட பெங்களூரு விதான சவுதா போலீசார், ரோகனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்வர் சித்தராமை யாவிற்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை