மோடியின் நிர்வாகத்திறன் என்னை மிகவும் கவர்ந்துள்ளது : பிரான்ஸ் அதிபர்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 24, ஜனவரி 2016 (19:9 IST)

மாற்றம் செய்த நாள் :24, ஜனவரி 2016 (19:9 IST)

 

மோடியின் நிர்வாகத்திறன் 

என்னை மிகவும் கவர்ந்துள்ளது : பிரான்ஸ் அதிபர்

குடியரசுதின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே பங்கேற்க உள்ளார். இதற்காக இந்தியா வந்துள்ள அவர், தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர்,  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சிறந்த நிர்வாகம் நடைபெற்று வருவதாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பதன்கோட் தாக்குதலில், இந்திய பாதுகாப்புப்படையின் நடவடிக்கை திருப்தியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட பிரான்ஸ் விரும்புவதாகவும் கூறியுள்ளார். மோடியின் நிர்வாக திறன், உரிய நேரத்தில் எடுக்கும் சரியான முடிவு உள்ளிட்ட பண்புகள் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் ஹாலண்டே கூறியுள்ளார்.  

மூலக்கதை