கஜூராஹோ நிர்வாண சிலைகளுக்கு அமைச்சர் புடவை கட்டி விடும் நாளுக்காக காத்திருக்கிறேன்: நயன்தாரா சாகல்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 24, ஜனவரி 2016 (11:45 IST)

மாற்றம் செய்த நாள் :24, ஜனவரி 2016 (11:45 IST)

கஜூராஹோ நிர்வாண சிலைகளுக்கு 

அமைச்சர் புடவை கட்டி விடும் நாளுக்காக

 காத்திருக்கிறேன்: நயன்தாரா சாகல் 

இந்தியாவில் அதிகரித்து வரும் சகிப்பின்மை குறித்து கருத்துக் கூறி முதன் முதலாக சாகித்ய அகாடமி விருதை திருப்பியளித்தவர் எழுத்தாளர் நயன்தாரா சாகல். இவரைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் தங்கள் சாகித்ய அகாடமி விருதை திருப்பியளிக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடந்த டாடா ஸ்டீல் கொல்கத்தா இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்ட இவர், “இந்துத்துவக் கொள்கைகளுக்கு உட்பட்டே நாட்டில் பல சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், கஜூராஹோ கோவிலில் உள்ள நிர்வாண சிலைகள் மிகவும் ஆபாசமாக இருப்பதால் நாட்டின் கலாச்சார அமைச்சரே, அவற்றிற்கு  புடவையால் மறைத்துவிடும் நாளுக்காக காத்திருக்கிறேன். நாட்டில் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள் கற்களால் தாக்கப்படுகின்றனர். அவர்கள் மீது கருப்பு மை ஊற்றப்படுகிறது. ஏன் கொலை கூட செய்யப்படுகிறார்கள். இதற்கெல்லாம் அரசின் பதில் வெறும் மவுனம் மட்டும்தானா? அல்லது அரசு தனது இந்துத்துவக் கொள்கையை பாதுகாப்பதிலேயே தீவிரமாக இருக்கிறதா?.

அவர்(பிரதமர் மோடி) ஒரு போதும் இந்தியாவை இந்து நாடாக மாற்றப் போவதாக கூறவில்லை. ஆனால் தற்போது இது அரசின் கொள்கையாகிவிட்டது. நாம் விரும்பாத ஒன்றிற்கு நாம் வலிந்து மாற்றப்படுவதற்கு முன்பாகவே, எங்களது கருத்துடன் ஒத்துப் போகும் நபர்களுக்கு, இந்தக் கொடுமைகளுக்கெதிராக எழுந்து நின்று போராட வேண்டிய கடமை இருக்கிறது’’ என்று அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை