ரூபாய் 10 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு: பதவி விலகிய அமைச்சர்

நக்கீரன்  நக்கீரன்
ரூபாய் 10 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு: பதவி விலகிய அமைச்சர்

பதிவு செய்த நாள் : 23, ஜனவரி 2016 (22:31 IST)

மாற்றம் செய்த நாள் :23, ஜனவரி 2016 (22:33 IST)

ரூபாய் 10 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு: பதவி விலகிய அமைச்சர்

கேரளாவில் மதுபான விடுதி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அம்மாநில கலால்துறை அமைச்சர் கே.பாபு பதவி விலகினார். 

மதுபான விடுதி உரிமத்தை புதுபிக்க அமைச்சர் கே.பாபு 10 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, கேரள மதுபான விடுதி கூட்டமைப்பின் செயல் தலைவர் பிஜூ ரமேஷ் குற்றம் சாட்டியிருந்தார். 

இதுதொடர்பாக வழக்கை விசாரித்த திருச்சூர் நீதிமன்றம் பாபு மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து பாபு தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். 

மூலக்கதை