மதுபானத்தை அருந்திய மூவருக்கு தலையில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை

கதிரவன்  கதிரவன்
மதுபானத்தை அருந்திய மூவருக்கு தலையில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் லிபி­யாவின் சிர்ட் நகரில் மது­பா­னத்தை அருந்­திய குற்­றச்­சாட்டில் மூவ­ருக்கு மர­ண­தண்­ட­னையும் பிறி­தொ­ரு­வ­ருக்கு கசை­யடித் தண்­ட­னையும் தம்மால் நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்­ளனர்.

அதே­ச­மயம் தெய்வ நிந்­தனை, மத எதிர்ப்பு மற்றும் கொள்­ளையில் ஈடு­பட்ட ஏனைய 3 ஆண்­க­ளுக்கும் தீவி­ர­வா­தி­களால் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

அந்தப் புகைப்­ப­டங்­களில் அற்­க­கோலை அருந்­தி­ய­தாக குற்­றச்­சாட்­டுக்­குள்­ளான நால்­வரும் தீவி­ர­வா­திகள் முன்­பாக மண்­டி­யிட்டு அமர்ந்­தி­ருக்க தீவி­ர­வா­தி­யொ­ருவர் அவர்களால் மேற்­கொள்­ளப்­பட்ட குற்­றங்கள் தொடர்பில் அறிக்­கை­யொன்றை வாசிக்­கிறார்.

தொடர்ந்து அவர்­களில் மூவ­ருக்கு தலை யில் துப்­பாக்­கியால் சுட்டு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­கி­றது. இத­னை­ய­டுத்து நான்­கா­வது நபர் கசை­யடித் தண்­ட­னைக்கு உள்­ளா­கிறார்.

இந்தத் தண்டனை நிறைவேற்றங்கள் பெருமளவு தீவிரவாதிகள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் இடம்பெற்றுள் ளமை குறிப்பிடத்தக்கது.

2016-01-23

மூலக்கதை