கறுப்பினப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த அமெரிக்க பொலிஸ் அதிகாரிக்கு 263 ஆண்டுகள் சிறை

கதிரவன்  கதிரவன்
கறுப்பினப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த அமெரிக்க பொலிஸ் அதிகாரிக்கு 263 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவில் தனது பணிக்காலத்தின்போது கறுப்பினப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 263 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஒக்லஹோமா மாகாணத்தில் பொலிஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர் டேனியல் ஹோல்ட்ஸ்கிளா.

கடந்த 2013 முதல் 2014 ஆம் ஆண்டு வரை அவர் கறுப்பினப் பெண்களை பாலியல் பலாத்காரம் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கியதாக அவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டது.

அவரால் பாதிக்கப்பட்ட டெமெட்ரியா கேம்பல் என்ற பெண், இது தொடர்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்குத் தொடர்ந்தார்.

டேனியலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து, அவர் கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டர்.

இந்த நிலையில், டேனியல் மீதான 36 குற்றச்சாட்டுகளில் 18 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்றம் அறிவித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், டேனியலுக்கு 263 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2016-01-23

மூலக்கதை