கேரள முன்னாள் சபாநாயகர் ஜோஸ் காலமானார்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 23, ஜனவரி 2016 (11:11 IST)

மாற்றம் செய்த நாள் :23, ஜனவரி 2016 (11:11 IST)

 

கேரள முன்னாள் சபாநாயகர் ஜோஸ் காலமானார்

கேரள மாநிலத்தின்  முன்னாள் சபாநாயகர் ஏ.சி. ஜோஸ் (வயது 79). காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், திருச்சூர் தொகுதியின் முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உறவினர்கள் அவரை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவரது இறுதிச்சடங்குகள் வருகிற செவ்வாய்க்கிழமை கொச்சியில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை