காதலர் தினத்தன்று வெளியாகும் அனிருத் ஸ்பெஷல் சாங்!

நக்கீரன்  நக்கீரன்
காதலர் தினத்தன்று வெளியாகும் அனிருத் ஸ்பெஷல் சாங்!

காதலர் தினத்தன்று வெளியாகும் அனிருத் ஸ்பெஷல் சாங்!

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் வருகின்ற காதலர் தினத்தையொட்டி 'அவளுக்கென' என்று தொடங்கும் பாடலை வெளியிடவுள்ளார். காதலர் தினத்தின் ஸ்பெஷல் பாடலாக ரசிகர்களுக்கு இந்த பாடலை வெளியிடவுள்ளார். இந்தப் பாடலின் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத பாடலுக்கு இசையமைத்து வெளியிடுகிறார் அனிருத். 


நானும் ரவுடிதான், வணக்கம் சென்னை, மாரி ஆகிய படங்களில் பல முறை இருவரும் இணைந்து பணிபுரிந்திருக்கின்றனர். இதில் சென்னையைப் பற்றிய பாடலாக வெளியான 'சான்ஸே இல்லை' மற்றும் காதலைப் பற்றி வெளியான 'எனக்கென யாரும் இல்லையே' போன்ற பாடல்கள் எந்தப் படங்களிலும் வெளியாகவிட்டாலும் அந்த பாடல்கள் ஹிட் பாடல்களாக இருக்கின்றனர்.


இந்நிலையில் இந்த வருட காதலர் தினத்திற்கு 'அவளுக்கென' என்ற ஒற்றைப் பாடலை அனிருத் வெளியிடுகிறார். 'எனக்கென' பாடலைப் போல இந்தப் பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை