மீண்டும் இணைகிறார் அஜித் அனிருத்!
மீண்டும் இணைகிறார் அஜித் அனிருத்!
வேதாளம் படத்தை தொடர்ந்து அஜீத்தின் அடுத்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. வேதாளம் படத்தின் ஹிட் பாடல்கள் காரணமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் தல 57 படத்தில் அனிருத்தையே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனராம்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேதாளம் கடந்த தீபாவளியன்று வெளியான வேதாளம் படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக மாறியது. இந்த மாபெரும் ஹிட்டுக்கு படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தன. குறிப்பாக வேதாளம் வெளியான திரையரங்குகளில் 'ஆலுமா டோலுமா' பாடலுக்கு ரசிகர்கள் எழுந்து நடனம் ஆடி மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்தனர்.
வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜீத் - சிறுத்தை சிவா இருவரும் 3 வது முறையாக இந்தப் படத்தின் மூலம் இணைகின்றனர். இதில் வீரம் 2014 ம் ஆண்டு பொங்கலுக்கும், வேதாளம் கடந்த ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகி வெற்றி பெற்றது. முன்னோட்டம் சிறுத்தை சிவா தற்போது 'தல 57' என்று அழைக்கப்படும் இப்படத்திற்கான முன்னோட்ட வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.
இந்தப் படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடிப்பதால் நாயகிகளாக நடிக்க தமன்னா மற்றும் கீர்த்தி சனோன் இருவரிடமும் சிவா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். தற்போதைய நிலவரப்படி கீர்த்தி சனோன் சம்மதம் தெரிவித்து விட்டாராம். ஆனால் தமன்னா தரப்பில் இருந்து இன்னும் எந்தத் தகவலும் இல்லை என்று கூறுகின்றனர். அனிருத்திற்கு 'தல 57' மூலம் ஒரு பிரேக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரியளவில் வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இந்தப் படம் அனிருத்திற்கு திருப்புமுனையாக அமையும், பழையபடி அவர் மீண்டும் பார்முக்குத் திரும்புவார் என்று அவரது ரசிகர்களும் நம்புகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
