அஜித்தின் 57வது படத்திற்கு அனிருத் கமீட்!

நக்கீரன்  நக்கீரன்
அஜித்தின் 57வது படத்திற்கு அனிருத் கமீட்!

அஜித்தின் 57வது படத்திற்கு அனிருத் கமீட்!

வேதாளம் படத்தை தொடர்ந்து அஜீத்தின் அடுத்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. வேதாளம் படத்தின் ஹிட் பாடல்கள் காரணமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் தல 57 படத்தில் அனிருத்தையே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனராம். 


இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேதாளம் கடந்த தீபாவளியன்று வெளியான வேதாளம் படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக மாறியது. இந்த மாபெரும் ஹிட்டுக்கு படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தன. குறிப்பாக வேதாளம் வெளியான திரையரங்குகளில் 'ஆலுமா டோலுமா' பாடலுக்கு ரசிகர்கள் எழுந்து நடனம் ஆடி மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்தனர். 

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜீத் - சிறுத்தை சிவா இருவரும் 3 வது முறையாக இந்தப் படத்தின் மூலம் இணைகின்றனர். இதில் வீரம் 2014 ம் ஆண்டு பொங்கலுக்கும், வேதாளம் கடந்த ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகி வெற்றி பெற்றது. முன்னோட்டம் சிறுத்தை சிவா தற்போது 'தல 57' என்று அழைக்கப்படும் இப்படத்திற்கான முன்னோட்ட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். 

இந்தப் படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடிப்பதால் நாயகிகளாக நடிக்க தமன்னா மற்றும் கீர்த்தி சனோன் இருவரிடமும் சிவா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். தற்போதைய நிலவரப்படி கீர்த்தி சனோன் சம்மதம் தெரிவித்து விட்டாராம். ஆனால் தமன்னா தரப்பில் இருந்து இன்னும் எந்தத் தகவலும் இல்லை என்று கூறுகின்றனர்.  அனிருத்திற்கு 'தல 57' மூலம் ஒரு பிரேக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரியளவில் வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இந்தப் படம் அனிருத்திற்கு திருப்புமுனையாக அமையும், பழையபடி அவர் மீண்டும் பார்முக்குத் திரும்புவார் என்று அவரது ரசிகர்களும் நம்புகின்றனர். 

மூலக்கதை