குடியரசு தினத்தில் பிரதமர் மற்றும் ஃபிரான்ஸ் அதிபரை கொலை செய்ய சதி

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
குடியரசு தினத்தில் பிரதமர் மற்றும் ஃபிரான்ஸ் அதிபரை கொலை செய்ய சதி

Friday, 22 January 2016 05:53

குடியரசு தினத்தில் பிரதமர் மற்றும் ஃபிரான்ஸ் அதிபரை கொலை செய்ய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத் துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனவரி 26ம் திகதி நாட்டின் 67வது குடியரசு தின விழாக் கொண்டாட்டங்கள் நடைப்பெற உள்ளன.அப்போது விழாவின் சிறப்பு விருந்தினராக ஃபிரான்ஸ் அதிபர் ஹோலண்டே கலந்துக்கொள்ள உள்ளார்.அந்நாளில் நரேந்திர மோடி மற்றும் ஹோலண்டேவை கொலை செய்ய ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் சதித்திட்டம் தீட்டி உள்ளது தெரிய வந்துள்ளதாக உளவுத்துறை கடுமையாக எச்சிரிக்கை
விடுத்துள்ளது.

இதையடுத்து டெல்லி நகரின் செங்கோட்டை மட்டுமல்லாது மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது மத்திய அரசு. 10 ஆயிரம் துணை ராணுவத்தினரும், 80 ஆயிரம் காவல் துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை