பதவி விலகிய ஜீவா - ஆர்யாவுக்கு வாழ்த்து!

நக்கீரன்  நக்கீரன்
பதவி விலகிய ஜீவா  ஆர்யாவுக்கு வாழ்த்து!

பதவி விலகிய ஜீவா - ஆர்யாவுக்கு வாழ்த்து!

பிரபல நடிகர்களை வைத்து உருவாக்கப்பட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் வருடாவருடம் ஜனவரி மாதத்தில் நடைபெறும். ஒவ்வொரு வருடமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்பூரி, மும்பை, பெங்கால் மற்றும் பஞ்சாபி என்று மொத்தம் 8 அணிகள் இதில் கலந்து கொண்டு விளையாடும். சிசில் ஆரம்பித்த புதிதில் சரத்குமார் கேப்டனாக இருந்து, பின்னர் விஷால் வசம் வந்த கேப்டன் பதவி அடுத்து ஜீவாவுக்கு வந்தது.


இந்நிலையில் சிசில் நட்சத்திரக் கிரிக்கெட்டின் சென்னை ரைனோஸ் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து நடிகர் ஜீவா திடீரென்று பதவி விலகியிருக்கிறார். தொடர்ந்து தனது படங்கள் தோல்வியடைவதால் இனிமேல் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஜீவா முடிவெடுத்திருப்பதாக கூறுகின்றனர். தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வருவதால் கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்த முடியவில்லை என்றுதான் ஜீவா இந்த முடிவிற்கு வந்தாராம். ஜீவாவிற்குப் பதிலாக நடிகர் ஆர்யாவை சென்னை ரைனோஸ் அணியின் புதிய கேப்டனாக நியமித்து இருக்கின்றனர்.

ஆர்யா கேப்டன் பதவி ஏற்றதை தொடர்ந்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஜீவா.

மூலக்கதை