அசின் திருமணம்! களை கட்டும் பாலிவுட்!

நக்கீரன்  நக்கீரன்
அசின் திருமணம்! களை கட்டும் பாலிவுட்!

அசின் திருமணம்! களை கட்டும் பாலிவுட்!

கோலிவுட்டில் கொடிகட்டி பறந்து, பாலிவுட்டுக்குச் சென்று சறுக்கி விழுந்தவர் நடிகை அசின். பாலிவுட்டுக்கு அகலக்கால் வைத்தது திரை வாழ்க்கையில் அவருக்கு ஏமாற்றமாக அமைந்தாலும் சொந்த வாழ்க்கையில் ஏற்றம் தான். 

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரில் ஒருவரான ராஹுல் ஷர்மாவுக்கும், அசினுக்கும் இடையே உண்டான காதல் தான் அந்த ஏற்றம். 6 கோடியில் நெக்லஸ் பரிசு கொடுத்து அசத்திய ராஹுலையே திருமணம் செய்ய அசின் ஒப்புக்கொள்ள தற்போது பாலிவுட்டே அந்த திருமணத்திற்கு தயார்படுத்திக்கொண்டிருக்கிறது.


ஜனவரி 19 மற்றும் 20 தேதிகளில் அசின் - ராஹுல் திருமணம் மிகவும் சிம்பிளாக மும்பையில் நடைபெற ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைகளில் நடைபெறவிருக்கும் இந்த திருமணத்தில் குடும்ப நண்பர்கள் மட்டும் கலந்துகொள்கின்றனர். 

திரையுலக நண்பர்களுக்காக 23-ஆம் தேதி ரிசப்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. திருமணம் சிம்பிளாக இருந்தாலும், பாலிவுட் நடிகர் நடிகைகள் வருகையால் ரிசப்ஷன் களை கட்டும் எனத் தெரிகிறது.

மூலக்கதை