சீனாவில் அறிவியலாளர்களை ஊக்குவிக்க நோபல் பரிசுக்கு இணையான புதிய விருது – 10 லட்சம் டாலர் ரொக்கப்பரிசு

கதிரவன்  கதிரவன்
சீனாவில் அறிவியலாளர்களை ஊக்குவிக்க நோபல் பரிசுக்கு இணையான புதிய விருது – 10 லட்சம் டாலர் ரொக்கப்பரிசு

அறிவியல் உள்ளிட்ட துறைகளுக்கு உலகின் உயரிய பரிசாக நோபல் பரிசு விளங்குவதுபோல் சீனாவில் உள்ள அறிவியல்துறை சாதனையாளர்களுக்கு மட்டும் ‘எதிர்கால அறிவியலாளர்’ என்ற விருதையும் 10 லட்சம் அமெரிக்க டாலர்களை ரொக்கப்பரிசாகவும் வழங்க அந்நாட்டின் பிரபல அறிவியலாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தீர்மானித்துள்ளனர்.

சீனாவில் அறிவியலுக்கென உயர்ந்த விருதுகள் ஏதுமில்லாத மனக்குறையை தீர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த உயரிய விருது வரும் 2017-ம் ஆண்டிலிருந்து வாழ்க்கை அறிவியல் மற்றும் பொருளறிவியல் துறையில் மகத்தான சாதனை புரிந்தவர்களுக்கு தலா 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் ரொக்கப்பரிசும், ‘எதிர்கால அறிவியலாளர்’ என்ற விருதும் அளிக்கப்படும் என ஏற்கனவே அறிவியலுக்கான நோபல் பரிசை வென்றுள்ள 94 வயது சீன-அமெரிக்கரான யாங் ழென்னிங் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த தேர்வுக்குழுவினரால் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் நோபல் பரிசை எப்படி அந்நாட்டு அரசு தலையிடுவதில்லையோ..?, அதேபோல், இந்த விருது விவகாரத்திலும் சீன அரசு தலையிடாது என்பது குறிப்பிடத்தக்கது.

2016-01-18

மூலக்கதை