ஐ.எஸ். தீவிரவாதிகளினால் சிரியாவில் 400 பேர் கடத்தல்!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
ஐ.எஸ். தீவிரவாதிகளினால் சிரியாவில் 400 பேர் கடத்தல்!

Monday, 18 January 2016 05:45

சிரியாவின் பக்னலியா நகரில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 400 பொதுமக்களை ஐ.எஸ். (IS- ISIS) தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

சிரியாவில் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்போது டெயிர் எஸ்ஸார் நகரை முற்றுகையிட்டு தாக்கி வருகின்றனர். இந்த நிலையிலேயே, இன்னொரு நகரான பக்னலியாவில் வைத்து பொதுமக்கள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கடத்தப்பட்டுள்ளனர்.

தங்களுடைய இயக்கத்தில் சேர்ந்து சண்டையிடுவதற்காக இவ்வாறு தீவிரவாதிகள் மனித கடத்தலில் ஈடுபட்டதாகவும், கடத்தப்பட்ட அனைவரும் ஒரு வாகனம் மூலம் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாகவும் சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை