இரண்டாவது போட்டியிலும் ஆஸி.வென்றது

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
இரண்டாவது போட்டியிலும் ஆஸி.வென்றது

அவுஸ்­தி­ரே­லிய – – இந்­திய அணிகள் மோதிக் கொண்ட இரண்­டா­வது ஒருநாள் போட்­டியில் இந்­தியா நிர்­ண­யித்த 309 என்ற வெற்றி இலக்கை 7 விக்­கெட்­டுக்கள் மீதம் வைத்து இலக்கை அடைந்து அவுஸ்­தி­ரே­லியா இரண்­டா­வது போட்­டி­யிலும் வெற்­றி­பெற்­றது.

இந்­திய அவுஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்­டா­வது போட்டி நேற்று பிரிஸ்­பேனில் நடை­பெற்­றது. இந்தப் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இந்­திய அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்­தது.

அதன்­படி இந்­தி­யாவின் ரோஹித் சர்­மாவும், ஷிகார் தவானும் தொடக்க ஆட்­டக்­கா­ரர்­க­ளாக களம் இறங்­கினர்.

இந்த போட்­டி­யிலும் தவான் 6 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்து வெளி­யே­றினார். இந்­திய அணி 9 ஓட்­டங்­க­ளுக்கு முதல் விக்­கெட்டை பறி­கொ­டுத்­தது.

அவரை தொடர்ந்து விராட் கோஹ்லி கள­மி­றங்­கினார். ரோஹித் சர்­மாவும், கோஹ்­லியும் இணைந்து நிதான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தினர். இதனால் இந்­திய அணியின் ஓட்ட விகிதம் சீராக உயர்ந்­தது.

ரோஹித் 61 பந்­து­க­ளிலும், கோஹ்லி 60 பந்­து­க­ளிலும் அரை­ச்சதம் பெற்­றனர்.

விராட் கோஹ்லி 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து ரோஹித் சர்­மா­வுடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்­பான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்தி வந்த ரோஹித் சர்மா 111 பந்­து­களில் சதம் விளா­சினார்.

இத­னை­ய­டுத்து இந்­திய அணி 255 ஓட்­டங்கள் எடுத்­தி­ருந்த போது ரோஹித் சர்மா 124 ஓட்­டங்­க­ளுடன் ரன் அவுட் முறையில் வெளி­யே­றினார்.

அவரை தொடர்ந்து தோனி 11 ஓட்­டங்­க­ளு­டனும், ரஹானே கடைசி வரை போராடி 89 ஓட்­டங்­களை எடுத்தும் அடுத்­த­டுத்து ஆட்­ட­மி­ழந்­தனர். இறு­தியில் இந்­திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கள் இழப்­பிற்கு 308 ஓட்­டங்­களை எடுத்­தது.

இத­னை­ய­டுத்து அவுஸ்­தி­ரேலிய அணிக்கு 309 ஓட்­டங்கள் இலக்­காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 309 ஓட்­டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்­குடன் அவுஸ்­தி­ரே­லியா களம் இறங்­கி­யது. இந்­திய வீரர்கள் சில பிடி­களை தவ­ற­விட்­டதால் தொடக்க வீரர்கள் பிஞ்ச் மற்றும் ஹோன் மார்ஷ் ஆகியோர் தலா 71 ஓட்­டங்­களை பெற்­றனர்.

அடுத்து வந்த ஸ்மித் 46 ஓட்­டங்­களைப் பெற்று போல்ட் முறையில் ஆட்­ட­மி­ழந்தார். 4ஆவது வீர­ராக களம் இறங்­கிய பெய்லி சிறப்­பாக விளை­யாடி அவுஸ்­தி­ரே­லிய அணியை வெற்றி பெற வைத்தார். இவ­ரது ஆட்­டத்தால் அந்த அணி 49 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்கள் இழப்­பிற்கு 309 ஓட்­டங்­களைப் பெற்று 7 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றது. பெய்லி 76 ஓட்டங்களையும், மேக்ஸ்வெல் 26 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மூலக்கதை